பொங்கல் முன்பதிவு சில நிமிடங்களில் தீர்ந்தது...! ஏமாற்றம் அடைந்த பயணிகள்..!

தமிழகத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை உள்ளது. இந்த பண்டிகையின்

By murugan | Published: Sep 12, 2019 11:40 AM

தமிழகத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை உள்ளது. இந்த பண்டிகையின் போது சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை செய்து வரும் மக்கள் பொங்கல் பண்டிகையை போது தங்கள் ஊர்களுக்கு செல்வர்கள். இதனால் பேருந்து நிலையங்கள் ,ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதும்.இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று காலை ரயில் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 10 -ம் தேதிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது. ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு நிறைவடைந்தது.மேலும் காலையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் காத்து இருந்த பல பயணிகள் ஏமாற்றம் அடைத்தனர். ஜனவரி 11-ம் தேதிக்கான முன்பதிவு நாளையும் ,ஜனவரி 12-ம் தேதிக்கான முன்பதிவு நாளைமறுநாளும் ,ஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு வருகின்ற 15-ம் தேதியும் ,ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு வருகின்ற 16-ம் தேதியும்  தொடங்குகிறது. மேலும் பண்டிகையை முடித்து விட்டு நகரங்களுக்கு திரும்ப ஜனவரி 19-ம் தேதிக்கான முன்பதிவு வருகின்ற 21-தேதியும் , ஜனவரி 20-ம் தேதிக்கான முன்பதிவு வருகின்ற 22-தேதியும் தொடங்குகிறது.
Step2: Place in ads Display sections

unicc