விநாயகர் சிலைகளை சாலைகளில் வைக்க தடை – புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்!

விநாயகர் சிலைகளை சாலைகளில் வைக்க தடை – புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்!

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை சாலைகளில் வைக்க தடை விதித்து புதுச்சேரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதிக அளவில் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் பெரும் தொற்றை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் சாலைகளில் விநாயகர் சிலைகளை வைத்து பிரசாதம் வழங்கி வழிபடுவது வழக்கம்.
ஆனால், இந்த வருடம் அந்த கொண்டாட்டம் உகந்ததாக இருக்காது என்பதால், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் விநாயகர் சிலைகளை சாலைகளில் வைத்து வழிபடவும் கோயில்களில் பந்தல் கட்டி விநாயகர் சிலைகளை வைத்து, பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கி கொண்டாடவும் தடை விதித்துள்ளார். பொது இடங்கள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய வேண்டாம் எனவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
author avatar
Rebekal
Join our channel google news Youtube