ரஜினியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். கோவாவில் நடைபெறும் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக  பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து விருது பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்தார்.