பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை:கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த நாகராஜ் அதிரடியாக நீக்கம் !!அதிமுக அறிவிப்பு

சமூக வலைதளமான  முகநூலில்(facebook) கணக்கு வைத்திருப்போர் பலரும் அவர்களுக்கென்று ஒரிஜினல் ஐ.டி வைத்திருக்கிறார்களோ இல்லையோ, பல போலி ஐ.டி-களுடனே சுற்றுகின்றனர். இதை தங்களால் முடிந்த அளவு முகநூல்(facebook) நிறுவனம் கண்காணித்து தான் வருகிறது என்றாலும், இதையும் மீறி பலக்கோடி போலி கணக்குகள் தவறான முறையில் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் முக்கிய இடத்தில் இருப்பது ,பெண்களை ஏமாற்றி ஆபாசமான படங்களை அவர்களை வற்புறுத்தியோ அல்லது அவர்களுக்கே தெரியாமல் எடுப்பது தான். இந்த நிலை நீண்ட காலமாக நடந்து வருகிறது தான். என்றாலும், இது தற்போது அதிகரித்து வருவதே வேதனைக்குரியது. இப்படிப்பட்ட ஒரு மோசமான சம்பவம் தான் பொள்ளாச்சியிலும் நடந்துள்ளது.

தவறான முறையில் பயன்படுத்திய நபர்கள்:

 

சில ஆண்கள் பெண்களை தவறான வழியில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக முகநூலை பயன்படுத்தி, பெண்களிடன் நட்பு அழைப்பு விடுத்து (Friend Request) பிறகு நல்லவர்களை போல நடித்து, ஆசை வார்த்தை காட்டி, தவறான முறையில் அவர்களை பயன்படுத்தி கொள்கின்றனர். இதையே தான் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள்  செய்துள்ளனர்.

பல பெண்களிடம் கைவரிசை:

கல்லூரி பெண்கள், பணக்கார பெண்கள், மிகவும் அழகான பெண்கள் போன்றோர்களை மட்டும் தேர்ந்தெடுத்து சபரி மற்றும் அவரின் 3 நண்பர்கள் ஆபாச முறையில் பெண்களை வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இதில் சுமார் 200 பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறு சிக்கினர்?
பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவியுடன் முகநூல் நண்பராகி அதன் பின்னர் அவரை நேரில் பார்க்க சபரி அழைத்துள்ளார். கடந்த 12 ஆம் தேதி ஊஞ்சவேலாம்பட்டியில் தனக்காக காத்திருக்குமாறு கூறியுள்ளான். அப்போது திடீரென்று காரில் தனது நண்பர்களுடன் வந்து, அப்பெண்ணை பலவந்தமாக வற்புறுத்தி ஆபாசமான முறையில் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

 

பாலியல் தொல்லை:
இந்த ஆபாச புகைப்படங்களை வைத்து அந்த மாணவியிடம் ஆரம்பத்தில் பணத்தை மிரட்டி வாங்கி வந்த நிலையில், அதன் பின் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதை தாங்கி கொள்ள முடியாத மாணவி காவல்துறையினரை நாடியுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சபரி மற்றும் நண்பர்கள்:

பின்னர் இது தொடர்பாக  சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு திருப்பதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.இதன் பின் 4 பேரையும்  காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அப்போது தான் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. கைது செய்து இவர்களின் மொபைலை ஆய்வு செய்ததில் 200 பெண்களின் ஆபாச புகைப்படங்கள் சிக்கியது.அதேபோல் 20 பேருடன் இந்த கும்பல் இயங்கி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை சிலர் மிரட்டியதாகவும் அதன் காரணமாகவும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் ஜோதி நகர் பார் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவரில் நாகராஜ்  அரசியல் பின்புலத்தை சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நாகராஜ்  என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பின்  அதிமுகவைச் சேர்ந்த நாகராஜ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஆளுங்கட்சியை சேர்த்தவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டும் அல்லாமல் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

 

Leave a Comment