பொள்ளாச்சி விவகாரம்….! நடிகர் சூர்யா எப்போதுமே வித்தியாசமா தான் யோசிப்பாரு….!!!

  • பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகர் சூர்யா சில வித்தியாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த சிலநாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், இந்த சம்பவத்தால் தமிழகமே கொந்தளித்து வருகிறது.

இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் குரலாக இருந்து வருகிறது.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகர் சூர்யா சில வித்தியாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் நடப்பதற்கு யார் காரணம்? அப்படியே ஒருவேளை இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டால் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக குடும்பத்தினர்களும் சமூகமும் நடந்து கொள்ள வேண்டியது எப்படி? இப்படி ஒரு சம்பவமே இனிமே நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார்.

நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்களுக்கு ஒவ்வொரு பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களாலும் பாராட்டப்பட்டது. அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

. .