பிரதமர் மோடியின் புதிய பிளான்… ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் அமைச்சர் குழு அதிரடியாக ஆய்வு செய்ய திட்டம்… உச்சபட்ச பரபரப்பில் டெல்லி வட்டாரங்கள்..

  • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சர் குழு ஆய்வு நடத்த திட்டம்.
  • பல்வேறு குழுவாக சென்று ஆய்வு செய்ய திட்டம்.

இந்திய அரசியலமைப்பு  காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த  இருயூனியன் பிரதேசங்களும் துணை நிலை ஆளுநர்கள் ஆட்சியின் கீழ் செயல்படுகிறது.இந்த நிலையில், வரும் ஜனவரி .18-ம் தேதி முதல் ஜனவரி  24 ம் தேதி வரை காஷ்மீரில் 36 மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related image

அங்கு செல்லும் அமைச்சர்கள்  பல்வேறு குழுக்களாக பிரிந்து இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள  அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இதற்க்கு முன்னதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன்ரெட்டி, ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு கடிதம் மூலம் சுற்றுப்பயணம் தொடர்பான தகவலை  தெரிவித்துள்ளார். என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

author avatar
Kaliraj