நெடுவாசல் ஹைட்ரொகார்பன் திட்டம்: அரசியல் பின்னணி..!

ஹைட்ரொகார்பன் திட்டம் எனும் நிலத்தடியில் தேங்கி இருக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டதிற்கு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடும் எதிர்ப்பு வழுக்கின்றன. அத்திட்டத்தின் அரசியல் பின்னணி மற்றும் அதனை அறிமுகப்படுத்திய அரசு எது? என்பதை தான் நாம் இக்கற்றையில் விரிவாக காண இருக்கிறோம்

ஹைட்ரொகார்பன் என்றால் என்ன? அதன் விரிவுரை என்ன? என தெரியாதவர்கள் “நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றிய விரிவுரை!!!” இதில் காணவும்.

ஹைட்ரொகார்பன் திட்டத்தின் துவக்கம் 

2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலிருந்த காலகட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் “மீத்தேன் எரிவாயுத் திட்டம்”  என்ற பெயரில் முதன் முதலாக தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. திட்டத்திற்கான ஒப்பந்தம் குஜராத் பின்புலம் கொண்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துடன் போடப்பட்டிருந்தது.

இத்திட்டம் யாதெனில், தஞ்சை டெல்டா நிலங்களில் வேதியியல் முறைப்படி மீத்தேன் எரிவாயுவை நிலத்தடி பகுதியில் இருந்து முழுமையாக பிரித்து  எடுப்பதாகும்.

அப்படி டெல்டா நிலங்களில் மீத்தேன் பிரித்து எடுக்கப்பட்ட சில வருடங்களில் சில வருடங்களிலேயே விளை நிலங்கள் முற்றிலும் வீணாகும். மேலும் நிலத்தடி நீர் வளங்களும் முற்றிலுமாக மாசுபடும்.

அதனால், இந்திய தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அமர்வு, குழு ஒன்றை அமைத்து இந்த மீத்தேன் எடுப்பதன் விளைவுகளைப் பற்றி முற்றிலுமாக ஆராய உத்தரவிட்டது.

இந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில், மீத்தேன் எடுக்கப்பட்டால் பேராபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பிறகு தமிழகத்தில் இருந்து மீத்தேன் எரிவாயுத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் தமிழகத்தை நோக்கி..

மீத்தேன் எரிவாயுத் திட்டம் தடை செய்யப்பட்டு சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஹைட்ரோ கார்பன் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் நெடுவாசல் உட்பட 15 இடங்களில் மீத்தேன் எடுப்பதற்கான திட்டமாக அறிவிக்கப்பட்டது. மீத்தேன் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இம்முறை இத்திட்டம் மீத்தேன் எடுப்பதற்காக மட்டுமல்ல அதனுடன் ஈதேன், ப்ரோப்பேன் மாற்றும் பியூட்டேன் போன்ற அனைத்து வாயுக்களையும் எடுப்பதற்காகவே பிரத்தியேகமாக போடப்பட்ட திட்டமாகும்.

உடன்படும் அரசியல் கட்சிகள் – எதிர்க்கும் மக்கள்!!

இத்திட்டத்தினால் மக்களும் விளைநிலங்களும் பாதிக்கப்படும் என்று தெரிந்தும் கார்ப்பரேட்களுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசின் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர் தமிழக மக்கள். இதேபோல் வித்திட்டதும் வருவதற்கு உறுதுணையாக இருந்த ஆளும் கட்சியான அதிமுக வின் மீதும் கோபத்தை கொண்டுள்ளனர் மக்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா??

இத்திட்டத்தினை அறிவித்த மற்றும் அனுமதித்த பாஜக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்துள்ளதால், ஹைட்ரோகார்பன் திட்டத்தை மனதில் கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அவர்களை ஆதரிப்பார்களா?? இல்லை எதிர்ப்பார்களா??  என பொறுத்திருந்துதான் நாம் காண வேண்டும்.

author avatar
Vignesh

Leave a Comment