கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது - சரத்குமார்

கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது - சரத்குமார்

கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது என சரத்குமார் தெரிவித்துள்ளார். 

பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், முரளிதரனின் கதாப்பாத்திரத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்திற்கு "800" என பெயரிடப்பட்டுள்ள நிலையில்,  இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான  நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது.

இந்நிலையில், இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்ததாக கூறி, விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. எதிர்ப்புகள் எழுந்தாலும், விஐய் சேதுபதிக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

 அந்த வகையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்கள் இதுகுறித்து கூறுக்கையில், "கலைத்துறையில் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்புடையதல்ல என்றும், சாதாரண மனிதன் பல போராட்டத்திற்கு பின், எப்படி உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதையை வரவேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில், அரசியல் ரீதியாக தலையிட்டு எதிர்ப்பது முறையற்றது என்றும், இந்த கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு  தெரிவித்தால், கலைத்துறை சுதந்திரத்துடன் செயல்பட முடியாத நிலை ஏற்படும்." என தெரிவித்துள்ளார்.

Latest Posts

டாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா!
தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை