வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீஸ் கைது.!

  • தஞ்சாவூரில் டிம்பிள் ஷியா என்பவர் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
  • வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்திலும் சரி வெளி மாநிலங்களில் மாணவர்கள் வேலையின்மை காரணமாக பல்வேறு கன்சல்டன்சி மற்றும் ஒரு சில ப்ரோக்கர்களிடம் செல்கின்றனர். அதில் குறைந்த நிறுவனங்கள் மட்டும் தகுதியான வேலையை வாங்கி கொடுக்கிறது மற்றவை பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிடுகின்றனர். இதனால் வேலை வாங்கி தரேன்னு சொல்லி பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் களணிகோட்டையைச் சேர்ந்த டிம்பிள் ஷியா என்பவர் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சேலத்தைச் சேர்ந்த லோகேஷ்வரனிடம் சுமார் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் லோகேஷ்வரனின் நண்பர்களான குணா, பிரவீன் உள்ளிட்டோரிடம் இருந்தும் தலா சுமார் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சொன்னபடி வேலை வாங்கித் தராததால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், டிம்பிளு ஷீயாவை மடக்கிப் பிடித்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்து, டிம்பிள்சியாவிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்