கொரோனவை விட கொடிய வைரஸ்.! எச்சரிக்கும் சீனா.! மறுக்கும் கஜகஸ்தான்.!

கஜகஸ்தானில் புதிய வைரஸ் பரவி வருவதாக சீன ஊடகங்கள் தெரிவித்து வரும் தகவலை கஜகஸ்தான் நாட்டு அரசு மருத்துவருகிறது.

கஜகஸ்தானின் உள்ள சீன தூதரகம் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டது. அதன்படி, உலகமே தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் பற்றியும் அதன் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆராய்ந்து வருகிறது. ஆனால், கஜகஸ்தானில் புதிய வைரஸ்(நிமோனியா – Pneumonia virus) பரவி வருவதாக தனியார் உள்ளூர் செய்தி சேனல்கள் கூறிவருவதாக தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த புதிய வைரஸானது, கொரோனா வைரஸை விட மோசமானது. இதன் இறப்பு விகிதம் கொரோனா வைரஸின் இறப்பு விகிதத்தை விட அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து ஏன் இன்னும் அதிகாரபூர்வ தகவலோ, எச்சரிக்கையா விடப்படவில்லை என தெரியவில்லை என பதிவிட்டுள்ளது.

ஆனால், கஜகஸ்தான் அரசு இந்த புதிய வைரஸ் பற்றிய சீன தூதரகத்தின் தகவலை மறுத்துள்ளது. புதிய வைரஸ் பற்றி சீன ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் தவறானவை .’ என கஜகஸ்தான் நாட்டு மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.