திருநெல்வேலியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 54 மின்கலத்திலான  குப்பை வண்டிகள் அனுப்பி வைப்பு!

பிரதம மந்திரியின் தூய்மை திட்டத்தின் கீழ் திருநெல்வேலி  மாநகராட்சி மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் மின்கலத்திலான சிறிய 54 குப்பை அள்ளும் வண்டிகள் கொண்டு வரப்பட்டு விரைவில் மண்டலங்களுக்கு வழங்கப்பட உள்ளன. திருநெல்வேலி  மாநகராட்சி ‘ஸ்மார்ட்’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.திருநெல்வேலி  மாநகராட்சி காலம் மாற்றம் ஏற்படுவதற்கு தகுந்து மாற்றம் அடைந்து வருகிறது. அதற்கு ஏற்ப குப்பைகள், கழிவுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Image result for பேட்டரி குப்பை வண்டி

எனவே இதை உடனடியாக அப்புறப்படுத்த  ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள்  வைக்கப்பட்டு குப்பைகளும் நிரம்பி வழிகிறது இதனைத் தவிர்க்க மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அள்ளுவதற்கு பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 54 மின்கலத்திலான  குப்பை வண்டிகள் திருநெல்வேலி  மாநகராட்சிக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளன.வரும்  மே மாதம்  23ம் தேதிக்கு பின்னர் இந்த குப்பை வண்டிகள் 4 பிரிவாக பிரித்து  வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள்  தெரிவித்தனர்.

author avatar
Kaliraj

Leave a Comment