அயோத்தி தீர்ப்பு ! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதிய இந்தியாவை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர

By venu | Published: Nov 09, 2019 06:20 PM

புதிய இந்தியாவை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடே எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.அதில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். தீர்ப்பு வெளியான நிலையில்,நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது .என் மனதில் இருப்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது .உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும்.வேற்றுமையில் ஒற்றுமையே நமது தாரக மந்திரம். நமது ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை உலகம் கண்டுள்ளது என்று உரையில் தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc