இன்று வீடீயோவை வெளியிடவுள்ள பிரதமர் மோடி

இன்று காலை 9 மணிக்கு சிறிய வீடியோ செய்தி வெளியிட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

By venu | Published: Apr 03, 2020 06:11 AM

இன்று காலை 9 மணிக்கு சிறிய வீடியோ செய்தி வெளியிட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து வீடியோ மூலம் கூறி வருகிறார். அந்த வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவும் வீடியோ மூலம் தான் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கொரோனா குறித்த பல்வேறு செய்திகளை வீடியோ மூலம் தெரிவித்திருந்த நிலையில்,பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார் .அவரது பதிவில், இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் ஒரு சிறிய செய்தியை சக இந்தியர்களுக்கு வெளியிட போவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc