ஓமன் அரசுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் முடங்கிப்போய்

By manikandan | Published: Apr 07, 2020 05:38 PM

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் முடங்கிப்போய் உள்ளன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற இந்தியர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஓமன் நாட்டு அதிபரிடம் பேசியுள்ளார்.

அப்போது, அங்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்படுத்திய வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள இந்தியர்கள் நலமுடன் இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடியின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதியபட்டுள்ளது.  ஓமனில் இதுவரை 371 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

 

Step2: Place in ads Display sections

unicc