இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை ஆற்றுகிறார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டு மக்களிடம் உரை ஆற்றப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த 5  தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 360 ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இது குறித்து, மக்களவையில் நீண்ட நேரம் பேசி இருந்தார். அமித்ஷாவை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களிடம் உரை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாரா விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்தார். இதையடுத்து பிரதமரின் உரை நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் ட்விட்டர் மற்றும் வானொலியில் நேரடியாக உரை ஆற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தார். பின்பு, அந்த பதிவு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு உரை ஆற்றுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.