அமெரிக்காவில் தமிழில் பேசிய பிரதமர் மோடி ! அவர் கூறியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்- கே.எஸ்.அழகிரி

அமெரிக்காவில் தமிழில் பேசிய பிரதமர் மோடி ! அவர் கூறியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்- கே.எஸ்.அழகிரி

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை பிரதமர் மோடி கூறியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்  ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேசினார்.அவர் பேசுகையில் ,கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்த நிலையில் மோடி பேசியது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை பிரதமர் மோடி கூறியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.தமிழும் தமிழ் சார்ந்த தத்துவங்களும் உலகத்தில் என்றும் நிலை நிற்கக்கூடியவை.மேலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி கொள்கை மகத்தானது.

நீட் தேர்வுக்கு மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும், நீட் தேர்விற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று மாநில அரசு கூறுவது தவறு. தமிழகத்தில் எது நடந்ததாலும் மாநில அரசுக்கு சம்பந்தம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube