பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு ! மாமல்லபுரம் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட

By venu | Published: Oct 10, 2019 07:01 PM

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னைக்கு வருகிறார். அடுத்த மறுநாள் இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்க் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது.இதற்காக போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி வருகின்ற  11,12,13 ஆகிய தேதிகளில் விடுமுறை ஆகும்.காவல்த்துறையின் அறிவுறுத்தலின் பெயரில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc