இன்றய அரசு விழாவில் 105 வயது பாட்டியின் காலை தொட்டு வணங்கிய பாரத பிரதமர்.. மனம் நெகிழ வைக்கும் சம்பவம்..

  • மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பாரத பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார்.
  • இதில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து  கொல்கத்தாவில் 2-வது நாளாக இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன.
     எனினும் இந்த துறைமுக ஆண்டு  விழாவில் நேற்று பிரதமர் மோடியுடன் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். இந்த மம்தாவின் பங்கேற்ப்பால்  கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே, பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளை மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய கொல்கத்தா துறைமுக விழாவில், முதியோர் உதவித்தொகை குறித்த பங்கேற்ப்பின் போது,
Image result for pm modi in kolkata harbour issue
105 வயது ஓய்வூதியதாரரான நகினா பகத்மற்றும் 100 வயதான நரேஷ் சந்திரா சக்கரவர்த்தி ஆகியோரை பிரதமர் மோடி சிறப்பித்தார். அப்போது 105 வயது நகினா பகத், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே  பாரத பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்க முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட  பிரதமர், அவரை உடனே தடுத்து  நகினா பகத்தின் பாதங்களை  தொட்டு வணங்கினார். பிரதமர் மோடியின்  இந்த செயல் அனைவரையும் மனம் சிலிர்க்க  வைத்தது.
author avatar
Kaliraj