பிரதமர் நிவாரண நிதிக்கு வந்த நிதியை தணிக்கை செய்ய வேண்டும் - ராகுல் காந்தி

பிரதமர் நிவாரண நிதி தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  கொரோனா

By venu | Published: May 10, 2020 04:31 PM

பிரதமர் நிவாரண நிதி தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 3-ஆம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் கொரோனா தடுப்பிற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரண நிதிகளை அறிவித்து வந்தது.இதற்கு இடையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.பிரதமரின் கோரிக்கையை ஏற்று பல தரப்பினரும் வழங்கி வருகின்றனர்.   

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே துறை ,தனியார் நிறுவனங்களும் பிரதமரின் நிவாரண நிதிக்கு ஏராளமான நிதியை அளித்துள்ளது.வந்துள்ள தொகையை தணிக்கை செய்ய வேண்டும்.நிதிக்கு வந்த பணத்தை செலவு செய்தது ,எவ்வளவு பணம் வந்தது என்று மக்கள் அனைவரும்ம்ம் தெரியப்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.  

Step2: Place in ads Display sections

unicc