ரஜினி மீது நடவடிக்கை வேண்டும் ..! நீதிமன்றத்தில் வழக்கு

Rajini wants action Litigation in court

  • நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
  • ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிட விடுதலைக் கழகம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்  பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக  தமிழகத்தில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.