பிளாஸ்டிக் தடை எதிரொலி: பிளாஸ்டிக் தடை உத்தரவை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்தது.
அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள்,மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் டீ கப், மக்காத தண்ணீர் கப் , தண்ணீர் பாக்கெட் ,பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்,பிளாஸ்டிக் கைப்பை மற்றும் பிளாஸ்டிக் கொடி என 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
Image result for சட்டசபையில் வேலுமணி தாக்கல்
இந்நிலையில் தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.அதில் தமிழகத்தில்  தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் என்று  சட்ட மசோதாவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அபராதம் விதிக்கும் வகையில் சட்ட முன்வடிவை அமைச்சர் வேலுமணி பேரவையில் தாக்கல் செய்தார்.முதல் முறை ரூ.25,000, 2வது முறை ரூ.50,000, 3வது முறை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் சேமித்தல், வழங்குதல், கொண்டுசெல்லுதல், விற்பனை, பகிர்ந்தளித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் என்று  சட்ட மசோதாவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment