பிறந்த நாள் கொண்டாட பணம் கொடுக்காததால் வாலிபர் தற்கொலை.!

தனது பிறந்த நாள் கொண்டாட பெற்றோர் பணம் தராததால் விஷம் குடித்து வாலிபர் 

By bala | Published: May 02, 2020 08:18 PM

தனது பிறந்த நாள் கொண்டாட பெற்றோர் பணம் தராததால் விஷம் குடித்து வாலிபர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாத்தான்குளம் அருகே பிச்சை மணி மகன் சித்திரைச் செல்வன் (23). இவர் கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கொரனோ வைரஸ் காரணமாக  ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,  தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த 23-ம் தேதி இவருக்கு பிறந்தநாள் என்பதால் இவரது பிறந்த நாள் கொண்டாட தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை பணம் இல்லை கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த  சித்திரைச்செல்வன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் சித்திரைச் செல்வனை நெல்லையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc