ஒட்டகசிவிங்கியிடம் உதை வாங்கிய காண்டாமிருகம்! பதறியடித்து ஓட்டம்!

ஒட்டகசிவிங்கியிடம் உதை வாங்கிய காண்டாமிருகம் பதறியடித்து ஓட்டம்.

உலகிலேயே மிகவும் உயரமான விலங்கு என்றால் அது ஒட்டகச்சிவிங்கி  தான். இந்த ஓட்டாகசிவிங்கி 6 முதல் 18 அடி வரை வளரக் கூடியது. அதேபோல், உலகிலேயே அதிக எடை கொண்ட விலங்குகளில் காண்டாமிருகமும் ஒன்று. காண்டாமிருகம் தோராயமாக 3,000 கி எடை கொண்டது.

இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், காண்டாமிருகம் ஒன்று, ஓட்டாகசிவிங்கியின் பின்புறம் தொடுகிறது, உடனே காண்டாமிருகத்தின் முகத்தில் ஒட்டகச்சிவிங்கி பின்னங்காலால் உதாக்கிறது.

இந்த தாக்குதலில் நிலைகுலைந்து போன காண்டாமிருகம், ஒட்டைச்சிவிங்கி உடலை திரும்புவதற்குள், பதறியடித்து வேகமாக ஓடுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.