உலக பொதுமறையை எழுதிய திருவள்ளுவரையே கூண்டிற்குள் சிக்க வைத்துவிட்டீர்களே?!

உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை வைத்து தற்போது

By manikandan | Published: Nov 09, 2019 04:35 PM

உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை வைத்து தற்போது சில அமைப்புகள் அரசியல் செய்து வருகின்றன. ஒரு சில விஷமிகள் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று போலீசார் பந்தோபஸ்து அளித்து வந்தனர். அதன் பிறகு இந்து கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் பிள்ளையார்பட்டியில் உள்ள சிலைக்கு ருத்ராட்ச மலை அணிவித்து பாலபிஷேகம் செய்து பூஜைகள் செய்தார். இது மிகவும் சர்ச்சையானது. பின்னர் அங்கு மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதியில் போக்குவரத்து தடை போடப்பட்டு, திருவள்ளுவர் சிலைக்கு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மஞ்சள் நிற கூண்டில் திருவள்ளுவர் சிலை இருக்கிறது.
Step2: Place in ads Display sections

unicc