வெப் தொடரில் களமிறங்கிய பிக்பாஸ் அபிராமி!

நடிகை அபிராமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கி, சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் பமீதா என்ற கேரக்டேரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து இவர், சோனி லிவ் செயலியில் வெளியாகியுள்ள, ‘இரு துருவம்’ என்ற இணைய தொடரில், நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த தொடர் கிரைம் திரில்லர் தொடராக உருவாக்கி உள்ளது.
 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.