உலகை உருக்கிய புகைப்படம்! யானை தனி , தும்பிக்கை தனி!

தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதியில் ஆவண பட இயக்குனர் ஜெஸ்டின் சுல்லிவான் தான் வைத்து இருந்த ட்ரோன் கேமராவை வைத்து காட்டுக்கு மேல பறக்க விட்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது அவர் பிடித்த ஒரு புகைப்படம் உலகயை அதிரவைத்து உள்ளது.அந்த படத்தில் ஒரு யானையின் தும்பிக்கை தனியாக வெட்டப்பட்டு யானை இறந்து கிடந்தது.இது குறித்து இங்கிலாந்தின் மெட்ரோ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த யானையின் புகைப்படத்திற்கு டிஸ்கனக்ஷன் (disconnection) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த யானையின் புகைப்படம் ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச புகைப்பட போட்டியில் தேர்வாகி உள்ளது.இந்த புகைப்படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்து உள்ளது.உடல் பாகங்களுக்காக விலங்குகள் கொல்லப்படுவது 534 சதவிதம் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து கூறிய ஆவண பட இயக்குனர் ஜெஸ்டின் ,இந்த புகைப்படத்திற்கு டிஸ்கனக்ஷன் பெயர் வைத்து உள்ளேன்.டிஸ்கனக்ஷன் என்பது அந்த யானைக்கும் , தும்பிக்கையும் இடையே உள்ள இடைவேளை அல்ல .விலங்குகளை கொல்லும் மனிதர்களை கண்டு கொள்ளாத  நமக்கும் உள்ள இடைவேளை என கூறினார்.

author avatar
murugan