ஹெல்மெட்டிற்குள் வைத்து போன் பேசும் நபரா நீங்கள்?? இதோ உங்களுக்கு ஒரு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் பொது, ஹெல்மெட்டில் இருந்த

By surya | Published: Jul 14, 2019 05:23 PM

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் பொது, ஹெல்மெட்டில் இருந்த போன் வெடித்ததால் இளைஞர் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள ஓசூர் அடுத்த உள்ள புளியரசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம். 40 வயதான இவர், தனது வேலை காரணமாக ஓசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சூளகிரி அருகே சென்ற பொது, அவருக்கு போன் வந்தது. அதனை எடுத்து அவர் தனது ஹெல்மெட்டில் வைத்து பேசினார். அப்பொழுது அவர் ஹெல்மெட்டில் இருந்த செல்போன் வெடித்தது.இதனால் அவர் தலை மற்றும் காது பகுதியில் காயம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Step2: Place in ads Display sections

unicc