இந்தந்த இடங்களில் மட்டும் பேட்ட டாப்! மற்ற இடங்களில் விஸ்வாசம் தான் டாப்!!!

அடுத்த வாரம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஜனவரி 10ஆம் தேதியன்று, தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும் வெளியானது. இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் யாருடைய படத்திற்கு அதிக வசூல் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அதில் சென்னை. திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பேட்ட வசூல் அதிகம் எனவும், மற்ற மாவட்டங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தின் வசூலே அதிகம் என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் ரேஸில் யாருக்கு அதிக வசூல் வந்துள்ளது என பொறுத்திருந்து பார்ப்போம்.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment