பேட்ட படத்தை புகழ்ந்து தள்ளிய சர்கார், அஞ்சான் பட இயக்குனர்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன் என பலர் நடப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த படத்தை பார்த்த திரைப்பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில், இதனை பாரத்த அஞ்சான், சண்டகோழி ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி டிவிட்டரில் படத்தை வெகுவாக புகழந்துள்ளார். இவர் ஒரு த்விரமான ரஜினி ரசிகரும் கூட.

அதே போல சர்கார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் பேட்ட படத்தை பார்த்துவிட்டு படத்தை வெகுவாக புகழ்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்தான் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment