துபாய் விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்க அக்டோபர் 2 வரை தடை.!

துபாய் விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குவதற்கு அக்டோபர் 2 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்க விதிகளின்படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் பயணத்திற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா நெகடிவ் மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும்..

இந்நிலையில், செப்டம்பர் 2 தேதியிட்ட கொரோனா பாசிடிவ் சான்றிதழ் பெற்ற ஒரு பயணி செப்டம்பர் 4 ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ஜெய்ப்பூர்-துபாய் விமானத்தில் பயணம் செய்துள்ளார். இதனால், துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை தாற்காலியமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.