உச்சத்திற்கு சென்ற பெட்ரோல் ,டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் இன்று உயர்ந்துள்ளது.   கச்சா

By venu | Published: May 04, 2020 12:14 PM

பெட்ரோல் மற்றும் டீசல் இன்று உயர்ந்துள்ளது.  

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருவதால் கச்சா எண்ணையின் விலை கடுமையாக குறைந்து உள்ளது.எனேவ இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது வந்தது.

ஆனால் ஒரு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.இதற்கு இடையில் தான் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி இன்றை பெட்ரோல் விலை ரூ.75.54 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டீசல் விலை  ரூ.68.22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   

Step2: Place in ads Display sections

unicc