கவுன்சிலர் கடத்தப்பட்டதாகக் கூறி வழக்கில் மனுதாரருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்.!

  • அதிமுகவை சேர்ந்த தர்மராஜ் உள்ளிட்டோர்களின் கட்டுப்பாட்டில் தனது தந்தையை வைத்து இருப்பதாக ராஜா என்பவர் மதுரை உச்சநீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
  • மகனுடன் இருக்க விரும்பாததால் மகள் மற்றும் மகனுடன் இருப்பதாக  ராஜா தந்தை தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய எட்டாவது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு  சாத்தையா என்பவர் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி காலை 5 மணி அளவில் தனது நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பி வரவில்லை. தன்னுடைய தந்தையை அதிமுகவை சேர்ந்த தர்மராஜ் உள்ளிட்டோர்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக கூறினார்.

தனது தந்தை மீட்டுத்தருமாறு மதுரை உச்சநீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி ராஜா , புகழேந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நாளை (அதாவது நேற்று) நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு  உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது .அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சாத்தையா நேரில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் நீங்கள் கடத்தப்பட்டீர்களா..? என அவரிடம் கேள்வி கேட்ட போது தன்னை யாரும் கடத்தவில்லை.

மகனுடன் இருக்க விரும்பாததால் மகள் மற்றும் மகனுடன் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் சொந்த பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டு வந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக கூறி மனுதாரருக்கு 15 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

author avatar
murugan