ரெம்டெசிவிர் , ஹைட்ராக்சிகுளோரோகுயின் தொர்டந்து இட்டோலிசுமாப் பயன்படுத்த அனுமதி.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைதொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஆரம்ப கட்டத்தில் தரலாம் என்றும், பின்னர், கொரோனா எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் மருந்தையும்  நோயாளிகளுக்கு தரலாம் என கடந்த 13-ம்  தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது

இதைதொடர்ந்து, நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்க மத்திய அரசு சஅனுமதி வழங்கியது. இந்நிலையில், தற்போது  சொரியாஸிஸ் நோய் சிகிச்சைக்கு பயன்படும் இட்டோலிசுமாப் மருந்தை தீவிர மற்றும் மிதமான நோயாளிகளுக்கு அவசர சூழல்களில் கட்டுப்பாடுடன் வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பின்னர் இம்மருந்தினை பயன்படுத்த இதய மருத்துவ நிபுணர்கள், மற்றும் மருந்தியல் துறை நிபுணர்கள் அடங்கிய குழுஅனுமதி வழங்கி உள்ளது.

author avatar
murugan