விருது வழங்க ஆளே இல்லையா..?…அறிவித்து நாளாச்சு..பார்க்கலயா..ஸ்டாலினுக்கு அரசு நச் பதில்..!

விருது வழங்க ஆளே இல்லையா..?…அறிவித்து நாளாச்சு..பார்க்கலயா..ஸ்டாலினுக்கு அரசு நச் பதில்..!

  • ஜனவரி 13ஆம் தேதி பெரியார் விருது அறிவிக்கப்படாதது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்
  • ஜனவரி 9ம் தேதி பெரியார், மற்றும் 10 ந் தேதி அம்பேத்கர் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டு அரசானையில் வெளியிட்டப்பட்டது என்று விளக்கம்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினை அறிவித்துள்ளது.அதன்படி  2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் 2019ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறித்துள்ளது. அம்பேத்கர் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பொற்கிழியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்சமயத்தில் தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப் படவில்லை.கடந்த ஆண்டு முன்,சொந்தக்கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா..?அல்லது டெல்லி எஜமானர்களின் மனங்களை குளிர்விப்பதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா.? என்று  தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பி  விமர்சித்து இருந்த நிலையில் அரசு அதிரடியாக  அறிவித்துள்ளது,

ஜனவரி 13ஆம் தேதி பெரியார் விருது அறிவிக்கப்படாதது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் ஜனவரி 9ம் தேதி பெரியார், மற்றும் 10 ந் தேதி அம்பேத்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு அதற்காக அரசு தரப்பில் அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது என்று  தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube