கலைகட்டும் பெரியகோயில் குடமுழுக்கு..!பிப்.,4-6 வரை சிறப்பு ரயில்..!

  • பிப்.,5 தேதி குடமுழுக்கு காண உள்ள தஞ்சை பெரியக்கோவில்
  • பிப்ரவரி

By Fahad | Published: Apr 06 2020 09:29 PM

  • பிப்.,5 தேதி குடமுழுக்கு காண உள்ள தஞ்சை பெரியக்கோவில்
  • பிப்ரவரி 4 முதல் 6 வரை சிறப்பு இரயிலை இயக்க உள்ளதாக தெற்குஇரயில்வே அறிவித்துள்ளது.
23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தற்போது நடைபெற உள்ளது.அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 5 ந் தேதி கோலகலமாக  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குடமுழுக்கு பணிகளானது பூர்வாங்க பூஜைகளுடன் ஏற்பாடுகள்  நடைபெற்று வருகிறது. நேற்று குடமுழுக்கு விழாவில் காவிரி புனிதநீரானது யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குவதை முன்னிட்டு வேதிகை அமைக்கும் பணிகளில் 300 சிவாச்சாரியார்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  பெரியகோயில் குடமுழுக்கை ஒட்டி பிப்ரவரி 4 ந்தேதி முதல் 6 ந்தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரயில் ஆனது தஞ்சையில் இருந்து திருவாரூர் மற்றும் காரைக்காலுக்கு இரண்டு நாட்களும் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts