1000 ஆண்டு கழித்து மூடப்பட்டது- தஞ்சை பெரிய கோவில்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டுகள் கழித்து பூட்டப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அடுத்து தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் மூடுமாறு தொல்லியல் துறைக்கு  உத்தர ஒன்றினை பிறப்பித்துள்ளது.அதன்படி வரலாற்று நினைவு சின்னமாக விளங்கி வருகின்ற தஞ்சை பெரியகோவிலை மூடுமாறு தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வந்ததை அடுத்து தஞ்சை பெரியகோவில் நேற்று காலை 11 மணி முதல் மூடப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை நடைதிறந்த போது  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களோடு வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். சரியாக 11 மணிக்குப் பிறகு பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. அதன்படி வருகிற மார்ச்.,31ந்தேதி வரை தஞ்சை பெரிய கோவில் மூடப்படுவதாகவும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்கின்ற அறிவிப்பு பதாகையும் மராட்டா நுழைவுவாயிலில் உள்ள பூட்டப்பட்ட கேட்டில் வைக்கப்பட்டுள்ளது.கோவில் பூட்டப்பட்டாலும் சுவாமிக்கு வழக்கம் போல பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

author avatar
kavitha