ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது-ஸ்டாலின்.!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று உள்ளது என

By murugan | Published: Jan 03, 2020 03:10 PM

  • ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
  • ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கிய 2-வது நாளாக இன்றும் நடைபெற்று இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கை வந்து உள்ளது.இதுவரை 24 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்து உள்ள நிலையில் மீதம் உள்ள 3 மாவட்டங்களுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அதில் , ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.ஆளும் கட்சி அராஜகம் அதிகார துஷ்பிரயோகத்தை மீறி திமுக உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று உள்ளது. ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமைச்சர்கள் மாவட்டங்களில் முகாமிட்டு பணத்தை வாரியிறைத்தும் அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி இருந்தால் திமுக இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்கும். தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc