கடும் குளிரால் சிக்கி தவிக்கும் மக்கள்.! காஷ்மீரில் தால் ஏரி உறைந்தது.!

  • உத்தரபிரதேசம், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, காஷ்மீர்

By Fahad | Published: Apr 08 2020 07:45 AM

  • உத்தரபிரதேசம், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இரவில் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் கடும் குளிர் நிலவுகிறது.
  • ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 6.2 டிகிரி செல்சியசாக குறைந்தது. இதனால் அங்கு உள்ள  தால் ஏரியின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் உறைந்தது.
இந்த ஆண்டு குளிர் என்பது மற்ற ஆண்டுகளை விட மிகவும் அதிகமாக உள்ளது. அதிலும் உத்தரபிரதேசம், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில்  இரவில் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் கடும் குளிர் நிலவுகிறது. விடிந்த பிறகும் சில மாநிலங்களில் நீண்ட நேரம் பனி மூட்டமாகவே காணப்படுகிறது. இந்த கடும் குளிரை சமாளிக்க பொதுமக்கள் தெருக்களில் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். கடும் குளிர் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவா உள்ளது. பனிமூட்டம் காரணமாக டெல்லி மற்றும் பிற வட மாநிலங்களில் சாலை ,ரயில் மற்றும் விமான போக்குவரத்து  பாதிக்கப்பட்டு உள்ளது. ஆக்ராவில் நேற்று குளிர் அதிகமாக இருந்தாலும் தாஜ்மகாலை பார்வையிட  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். குளிர் காரணமாக அரியானாவில் இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 6.2 டிகிரி செல்சியசாக குறைந்தது. இதனால் அங்கு புகழ்பெற்ற தால் ஏரியின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் உறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து உள்ளது.

Related Posts