அச்சத்தில் மக்கள்.! ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு.!

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது.

By balakaliyamoorthy | Published: Jan 02, 2020 01:14 PM

  • ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது.
  • இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை. ஆனால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், இதுகுறித்து அரசு ஊடகம் கூறுகையில், ஈரானின் வடமேற்குப் பகுதியில், ஆப்கன் எல்லையோரத்தில் சன்கன் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 8 கிலோ மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஈரான் அவசர உதவிக் குழு ஒன்று கூறும்போது , இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை. எனினும் நிலநடுக்கத்தினால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் எங்கள் குழு விசாரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இராக் - ஈரான் எல்லையில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 2003-ம் ஆண்டு ஈரானில் கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 23,000 பேர் பலியாகினர்.
Step2: Place in ads Display sections

unicc