மாஸ்டர் படத்தின் “பவானி” கேரக்டர் குறித்து மக்கள் செல்வன்.!

மாஸ்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரம் துளி கூட நல்லவன் இல்லை, முழுக்க முழுக்க புயல் டெவிலாக இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள படம் மாஸ்டர் .இதில் விஜய் அவர்களுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். எனவே தளபதியின் ரசிகர்களும், விஜய் சேதுபதியின் ரசிகர்களும் மாஸ்டர் படத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் திரையரங்குகள் திறக்கப்படும் போது வெளிவரும் முதல் படம் மாஸ்டர் தான் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில்  விஜய் சேதுபதி சமீபத்தில்  அளித்த பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் தனது வில்லன் கதாபாத்திரமான பவானி குறித்து கூறியுள்ளார். மாஸ்டர் படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நடிப்பதாகவும், முழுக்க முழுக்க வில்லன் தான் என்றும், துளி கூட நல்லவன் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது தனது ஆசை என்றும், அந்த வாய்ப்பு தற்போது கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதிலிருந்து மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவரை யாரும் பார்த்திராத வில்லன் கேரக்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.