டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப குவியும் மக்கள்.!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாவதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், டெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் தங்களது சொந்த ஊர் மற்றும் கிராமங்களுக்கு செல்வதற்காகக் குவிந்துள்ளனர். டெல்லியில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்கள் நடைபயணம் மூலமே பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். 

இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,டெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், இங்கவே இருக்குமாறு வலியுறுத்தினார். மேலும், 800 பகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக மதிய உணவு மற்றும் இரவு உணவை அரசு வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், தொழிலாளர்கள் டெல்லியில் இருந்து கிளம்புவதன் மூலம், ஊரடங்கின் நோக்கமே அர்த்தமற்றதாகிவிடும் என்றும் குறிப்பிட்டார். மேலும் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவோருக்கு உத்தரபிரதேசத்தில் முதல்வர் 1000 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்தார். இருந்தாலும் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்