குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களே போராடுகிறார்கள்- தமிமுன் அன்சாரி

  • குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் பேரணி நடைபெற்றது. 
  • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களே போராடுகிறார்கள் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் தொடரும் போராட்டம் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது.நேற்று சென்னை, ஆலந்தூர் பகுதியில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஆலந்தூர் பேருந்து பணிமனையில் இருந்து பேரணியாக போராட்டம் நடத்தி சென்றனர் .இந்த போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ஆதரவு தெரிவித்தார் .இதற்கு இடையில் செய்தியாளகர்ளிடம் அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களே போராட்டம் நடத்துகிறார்கள். இந்தியர்கள் மற்றொரு சுதந்திர போராட்டத்தை நடத்தி வருகின்றனர்  என்று தெரிவித்துள்ளார்.