எனது அணியில் மெஸ்ஸிக்கு தான் இடம்! ரொனால்டோவுக்கு நோ!! கால்பந்து வீரர் பீலே அதிரடி!!!

கால்பந்து உலகில் தற்போதைய சாம்பியன்ஸில் தெரிந்த முகமாகி இருப்பவர்களில் முக்கியமானவர்கள் ரொனால்டோவும், மெஸ்ஸியும் தான். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. அதில் தற்போது ஒப்பிட்டு பேசி இருப்பவர். கால்பந்து உலகின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரேசிலை சேர்ந்த பீலே. இவரிடம் நீங்கள் ஓர் அணியை தயார் செய்தால் யாருக்கு இடம் கொடுப்பீர்கள் மெஸ்ஸியா, ரொனால்டோவா என கேட்டதற்கு, அவர்,மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது.மிகவும் கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி வித்தியாசமான வி;ஐயாடும் திறன் கொண்டவர். ஏராளமானோர் என்னை{பீலே}ஜார்ஜ்  உடன் ஒப்பிடவது உண்டு. ஆனால், நாங்கள் இருவரும் வித்தியாசமான விளையாட்டு ஸ்டைலை உடையவர்கள். மெஸ்சி (நல்ல ஒருங்கிணைப்பாளர் )   ரொனால்டோ (மைய முன்னோக்கு வீரர்). நான் ஓர் அணியை தேர்வு செய்தால் அந்த அணியில் ரொனால்டோவை விட மெஸ்ஸிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் எனவும் கூறியுள்ளார். மேலும், தனது அப்பா ஓர் சிறந்த மைய முன்னோக்கு வீரர். அவர் எனக்கு பயிற்சி கொடுக்கும் போது அவர் 1 கோல் அடித்தால்  நான் மூன்று கோல்கள் அடிக்க வேண்டும் என்னை பயிற்சி அளிப்பார். அவரின் உந்துததாலே நான் கால்பந்து வீரனானேன். என கூறினார். DINASUVADU

Related News