தான் வென்ற பரிசுத்தொகையை நீர்நிலைகளை தூர்வாரும் இளைஞர்களுக்கு கொடுத்த பள்ளி மாணவி!

பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் மாணவி அனுபிரேமா. இவர் தந்தைபெயர் கண்ணன்.  அனுபிரேமா, பல்வேறு கட்டுரை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றவர். இவர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு முதலமைச்சர் கையால் பதக்கமும் பரிசும் வாங்கியுளளார்.

இவர் அண்மையில் பட்டுக்கோட்டையில், தமிழ் தாத்தா உ.வ.சா  இலக்கிய மன்றம் சார்பாக ‘ பேரிடர் பாதிப்பு சமயங்களில் மக்களுக்கு அரசு எந்த மாதிரியான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தியது.

இதில் கலந்து கொண்ட அனுபிரேமா முதல் பரிசை வென்றார். இதில் 3000 ரூபாய் பரிசுத்தொகையாக கொடுக்கப்பட்டது. இந்த பரிசுத்தொகையை தனது கிராமத்தில் நீர்நிலைகளை 100 நாட்களை கடந்து தூர்வாரி வரும் இளைஞர்களுக்கு அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.