திரைபிரபலங்களின் பாராட்டு மழையில் கம்பீரமாக நாளை களமிறங்கும் பரியேறும் பெருமாள்!!!

மெட்ராஸ்,கபாலி, காலா பட இயக்குனர் பா ரஞ்சித் முதன் முதலாக தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தினை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதிர் கதாநாயகனாகவும், கயல் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் காட்சி திரை பிரபலங்களுக்கு திரையிடப்பட்டிருந்தது அதனை பார்த்த அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். நடிகர் சித்தார்த், இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் அட்லீ, விக்ரம் வேதா இயக்குனரர்கள் புஷ்கர் காயத்ரி, மெட்ராஸ் கலையரசன் ஆகியோர் தங்களது டிவிட்டரில் பக்கத்தில் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment