பெற்றோர்களே! நீங்க தான் உங்க பிள்ளைகளுக்கு வழிகாட்டி! அப்ப நீங்க என்ன செய்யனும் தெரியுமா?

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருக்க வேண்டும். 

இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தையை ஒழுக்கமாக நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்பி அதிகமாக பிரயாசப்படுகிறோம். ஆனால், பிள்ளைகள் சரியான பாதையில் நடப்பதற்கு, நாம் ஒரு சரியான பாதையாக இருக்க வேண்டும். உங்களது செய்ல் முறைகள் தான், உங்கள் பிள்ளைகளை உருவாக்குகிறது. 

செயலால் பேச வேண்டும் 

நாகரீகம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், குழந்தைகளை வார்த்தைகளால் சொல்லி திருத்த முடிவதில்லை. அவர்களை செயல்களால் தான் திருந்த முடியும். 

உதாரணமாக, நாம் குழந்தைகள் காலையில் நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். இந்த பழக்கமானது முதலில் பெற்றோரிடம் இருக்க வேண்டும். நீங்கள் இதை உங்கள் வாழ்வில்,  செயலில் காட்டும் போது, குழந்தைகளும் இதை கைக்கொள்ள வசதியாக இருக்கும். 

நேரம் தவறாமை 

நேரம் தவறாமை என்பது, பள்ளி செல்லும் குழந்தைகளின் வாழ்வில் மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில், குழந்தைகள் நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்றால், பெற்றோர்கள் ஒரு இடத்திற்கு செல்லும் போது, சரியான நேரத்திற்கு செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். 

பாஸ்ட்புட் உணவுகள் 

இன்றைய தலைமுறையினர், உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தக் கூடிய, கலாச்சார உணவுகளை மறந்து, உடல் ஆரோக்கியத்தை சீரழிக்க கூடிய, மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி உண்ணுகின்றனர். 

இந்த உணவுகளை குழந்தைகள் கொடுக்க கூடாது என்று பெற்றோர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், பாஸ்ட்புட் உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் முதலில் பெற்றோரிடம் இருக்க கூடாது. மேலும், குழந்தைகளுக்கு அதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகள் குறித்தும் விளக்க வேண்டும். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.