இறந்த குழந்தையை புதைக்க சென்ற பெற்றோருக்கு, மண்ணுக்கடியில் உயிருடன் கிடைத்த பெண் குழந்தை!

உதிர்ப்பிரதேசத்திலுள்ள பரோலி எனும் ஊரில்  இருவருக்கு கடந்த சில நாட்களுக்கு

By Rebekal | Published: Nov 14, 2019 02:44 PM

உதிர்ப்பிரதேசத்திலுள்ள பரோலி எனும் ஊரில்  இருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால், அவர் 7 வது மாதத்திலேயே பிரசவித்ததால் குழந்தை இறந்து தான் பிறந்துள்ளது. அப்பொழுது அவர்கள் வீட்டுக்கருகில் உள்ள சுடுகாட்டில் தங்கள் குழந்தையை புதைக்க மண்ணை தோண்டிய போது, 3 அடி தோண்டிய பின்பு, குழந்தை அழுது சத்தம் கேட்டுள்ளது. அதனால் பக்குவமாக கைகளால் மண்ணை கிளறிய இறந்த குழந்தையின் தந்தைக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அதாவது, அந்த மண்ணுக்கடியில் இரண்டு நாட்களுக்கு முன்பு யாரோ ஒரு அழகிய பெண் குழந்தையை மண் பானையில் வைத்து புதைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருஙக அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது 1.1 கிலோ மட்டுமே இருந்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு முளையில் மட்டும் லேசாக தொற்று ஏற்பட்டுள்ளதாம். ஆனால், அதனால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்  மருத்துவர்கள். தற்போது அந்த குழந்தை உயிருடன் தான் உள்ளது. 1.1 கிலோவுடன் வந்த அந்த குழந்தை தற்போது 2 கிலோவாக உள்ளதாம். நல்ல உடல் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாம். அந்த குழந்தையை பா.ஜா.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா தத்தெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், அந்த குழந்தையை அவர்கள் பெற்றோர்கள் தான் புதைத்திருப்பார்கள் என தொடக்கம் முதல் சந்தேகிக்கும் போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த காலம் முதல் தற்போது வரை என்ன தான் நவீன யுகமாக இருந்தாலும், பெண் குழந்தைகளுக்கு எதிர்ப்பு தான் உள்ளது. அவ்வாறு செய்பவர்கள் குழந்தை இல்லாதவர்களை சற்று நினைந்து பார்க்க வேண்டும்.
Step2: Place in ads Display sections

unicc