போடு தகிடதகிட...55 பந்துகளில் 158 ரன்கள் தெறிக்கவிட்ட பாண்டியா!

மும்பையில் நடைபெற்று வரும் டிஒய் படேல் டி20 போட்டியில் விளையாடி வருகின்ற

By kavitha | Published: Mar 07, 2020 06:59 AM

மும்பையில் நடைபெற்று வரும் டிஒய் படேல் டி20 போட்டியில் விளையாடி வருகின்ற இந்திய வீரர் பாண்டியா 55 பந்துகளில் 158 ரன்களை அடித்து நொறுக்கி  பேட்டிங்கில் அசத்தி வருகிறார். 

இந்திய வீரர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

Image

சிகிச்சைக்குப் பிறகு தனது  பயிற்சியைத் தொடங்கிய ஹாா்திக் பாண்டியாவிற்கு பந்துவீச்சு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் தோ்ச்சி பெறாததால் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும்  டி20, டெஸ்ட் தொடர்களில் அவருக்கு இடம்கிடைக்கவில்லை.இது அவருடைய ரசிகருக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது  இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் டிஒய் படேல் டி20 பங்கேற்று போட்டியில் விளையாடி வருகின்ற ஹர்த்திக் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். தன் விளையாட்டு குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக அவருடைய அதிரடி ஆட்டம் அமைந்துள்ளது.

Image

ஹர்த்திக் இதற்கு முன் 39 (பந்துகளில்) 105 ரன்கள் எடுத்த நிலையில்  தற்போது பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிராக 55 (பந்துகளில்)  158 ரன்களை விளாசி களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்து உள்ளார். இதில் 20 (சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும்) அடங்கும். ரிலையன்ஸ் 1 அணிக்காக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Image result for hardik pandya

மும்பை டி20 போட்டியில் பாண்டியா எடுத்த ரன்கள்

46(29)
105(39)
38(25)
158*(55)

https://twitter.com/im_neeru20/status/1234845861194022917

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் மோதுகின்ற ஒருநாள் தொடரானது மார்ச்., 12 அன்று தொடங்க உள்ளது. இத்தொடருக்காக ஹர்த்திக் நன்குத் தயாராகி வருவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.மேலும் ஹர்த்திக்கியும் அதிரடி ஆட்டமானது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.ரசிகர் ஒருவர் பகிர்ந்த வீடியோ உங்களுக்காக..

Step2: Place in ads Display sections

unicc