இந்திய கிரிக்கெட் வீரர் பாண்டியாவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வறையில் எப்போதும் தன் மீதே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சில வேலைகளைச் செய்பவர் ஹர்திக் பாண்டியா என்ற பெயர்  அவருக்கு உண்டு.

அவர் தன் சுய முக்கியத்துவத்தை மிகவும் வலியுறுத்துபவர், கவன ஈர்ப்பு ஆசாமி என்றேல்லாம் பாண்டியாவை ஓய்வறையில் வீரர்கள் சிலர் நட்புக் கலாய்ப்புச் செய்வதும் உண்டு.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீர்ர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதில் அவுட் ஆஃப் பார்ம் பாண்டியாவும் ஒருவர்.

இந்நிலையில் பிசிசிஐ-யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் தினேஷ் கார்த்திக்கும், கே.எல்.ராகுலும் ஹர்திக் பாண்டியாவை நட்பு ரீதியாகக் கலாய்த்தனர். இதற்குப் பாண்டியாவும் பதில் அளித்துள்ளார்.

பிசிசிஐ ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில் ராகுல், “வீ டோண்ட் மிஸ் யூ அட் ஆல், அடுத்த 3 மாதங்கள் மிகவும் அமைதியான மாதமாக இருக்கும்” என்று கலாய்த்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்கும், “நாங்கள் நிச்சயம் அவரை ‘மிஸ்’ செய்யவில்லை. இந்தத் தொடரில் அவரில்லாமல் எல்லாம் நன்றாகவே உள்ளது.

ராகுல் மேலும் கூறியபோது, “மிகவும் அமைதியாக உள்ளது. வெளியில் சென்றால் அவரது சுயமுக்கியத்துவம் இல்லாமல் நாங்கள் அமைதியாகச் செல்கிறோம். அவர் கவன ஈர்ப்பு செய்யும் நபர். ‘எல்லோரும் என்னைப் பாருங்கள், நான் இந்த வாட்ச் அணிந்திருக்கிறேன், நான் பேசுவதைக் கேளுங்கள், இதை இன்றுதான் வாங்கினேன்’ என்று கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுவார் பாண்டியா. எங்களுக்கு ஆர்வமில்லை, நாங்கள் நீ பேசுவதை கேட்க விரும்பவில்லை” என்று ராகுல் சிரித்தபடியே பேசியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த பாண்டியா தன் ட்விட்டரில், “ஐ ஸ்டில் லவ் யு போத்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment