பஞ்சமி நிலச்சர்ச்சை : உதயநிதி நேரில் ஆஜராக நோட்டீஸ்

நவம்பர் 19 ஆம் தேதி நேரில் ஆஜராக முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி

By venu | Published: Nov 16, 2019 08:47 PM

நவம்பர் 19 ஆம் தேதி நேரில் ஆஜராக முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி ஆஜராகவேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அசுரன் படத்தை பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து கருத்து கூறியிருந்தார்.இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து  முதல் பஞ்சமி நிலம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளது எனபாஜகவை சேர்ந்த சீனிவாசன்  தேசிய தாழ்த்தபட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாகநேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழக அரசின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது தேசிய தாழ்த்தபட்டோர் நல ஆணையம். இந்த நிலையில் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அதாவது வருகின்ற 19-ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில்  உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc